என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ப்ரியா ஆனந்த்
நீங்கள் தேடியது "ப்ரியா ஆனந்த்"
கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `எல்கேஜி' படத்தின் முன்னோட்டம். #LKG #RJBalaji #PriyaAnand
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `எல்கேஜி'.
ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - விது அய்யணா, படத்தொகுப்பு - அந்தோணி, கலை இயக்குனர் - டி.பாலசுப்ரமணியன், சண்டைப்பயிற்சி - சில்வா, பாடல்கள் - பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி சிங், திவ்யா நாகராஜன், தயாரிப்பு நிர்வாகம் - கே.எஸ்.மயில்வாகனம், ஒலி வடிவமைப்பாளர் - டி.உதயகுமார், தயாரிப்பாளர் - டாக்டர் ஐசரி கே.கணேஷ், எழுத்து - ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள், இயக்கம் - கே.ஆர்.பிரபு
படம் பற்றி பிரியா ஆனந்த் பேசும் போது,
இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.
பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் என்றார்.
எல்கேஜி வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
எல்கேஜி டிரைலர்:
பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்.கே.ஜி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசியல் வசனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரியா ஆனந்த் கூறினார். #LKG #RJBalaji #PriyaAnand
பிரபு இயக்கி உள்ள ‘எல்.கே.ஜி’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார் கணேசன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்.ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள், டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் பிப்ரவரி 22-ந் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த ‘எல்.கே.ஜி’ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய பிரியா ஆனந்த் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.
பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்’ என தெரிவித்தார். #LKG #RJBalaji #PriyaAnand
பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். #LKGPressMeet #RJBalaji #NanjilSampath
ம.தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். இலக்கியவாதியான இவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரனை ஆதரித்தவர், தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் நடிப்பில் உருவாகி உள்ள படம் எல்.கே.ஜி. இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:-
‘நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்த படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் கட்சியில் சேர்ந்தார். இன்னோவா வாங்கினார் என்று செய்திகளில் படித்ததால் வசதியாக இருப்பார் என்று நினைத்தேன்.
பட்டினப்பாக்கத்தில் ஹவுசிங்போர்டில் வீடு. 600 சதுர அடி வீடு அது. அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியாக இருந்தது. அவர்கிட்ட கதையை சொல்லி ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.
ஒருநிமிடம் யோசித்தார். என்னை பார்த்தார். ‘சரி, நடிக்கிறேன். ‘என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறியா?’ என்று கேட்டார். 40 வருடமா அரசியல்ல இருக்கார். பல அரசியல்வாதிகள் தங்கள் பையனுக்காக காலேஜே கட்டியிருக்காங்க. ஆனால் நாஞ்சில் சம்பத், பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டமுடியலை. ரொம்பவே வேதனையா இருந்துச்சு.
படத்துல அவருக்கு வில்லத்தனமான அரசியல்வாதி வேடம்தான். ஆனால் அவரோட குணம் தெரிய ஆரம்பித்ததும் அவரோட நல்ல மனசு புரிந்து அவரோட கேரக்டரை மாற்றினோம். அவரோட குணத்தை வைத்தே கதாபாத்திரம் பண்ணினோம். அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதிக்கவேண்டும்’.
இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார். #LKGPressMeet #RJBalaji #NanjilSampath #PriyaAnand
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #LKG #RJBalaji #PriyaAnand
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்.கே.ஜி. நடப்பு அரசியலை கிண்டல் செய்து உருவாகும் இந்த படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.
தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டார். இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அ.தி.மு.க. வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் டுவிட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணப்போவதாக தெரிவித்தார். இந்த டுவீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி ’இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என்று பதில் அளித்தார்.
இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம Mass ah காமிங்க...!🤣😎 https://t.co/HkNjFjzr6q
— LKG (@RJ_Balaji) January 23, 2019
இதற்கிடையே சிம்பு ரசிகர்கள் ஆர்.ஜே. பாலாஜியை, அ.தி.மு.க.
நிர்வாகியை மட்டும் கிண்டல் செய்யுங்கள். தேவை இல்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரஜ தினத்தன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #LKG #RJBalaji #PriyaAnand
பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - ப்ரியா ஆனந்த் நடிக்கவிருக்கும் அரசியல் படத்தில், நாஞ்சில் சம்பத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #LKG #RJBalaji #NanjilSampath
ம.தி.மு.க.வில் பேச்சாளராகவும் வைகோவுக்கு நெருக்கமாகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத்.
பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். பேச்சாளராகவும் துணை கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்து வந்தார்.
ஜெயலலிதா இவருக்கு இன்னோவா கார் பரிசளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர் பின்னர் அவரிடமே தஞ்சம் ஆனார்.
தினகரனின் ஆதரவாளராக தொடர்ந்து பயணித்த நாஞ்சில் சம்பத் தினகரன் கட்சி தொடங்கும்போது கட்சி பெயரில் திராவிடம் இல்லை என்று அவரை விட்டு வெளியேறினார்.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் சினிமாவில் நடிக்கிறார். காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலை கிண்டல் செய்யும் படம் ஒன்றில் நடிக்கிறார்.
எல்.கே.ஜி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகி. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.
நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் படத்திலும் அரசியல்வாதியாகவே வருகிறார். நடப்பு அரசியலை முழுக்க முழுக்க கிண்டல் செய்யும் படமாக தயாராகிறது எல்.கே.ஜி.
நாஞ்சில் சம்பத்துக்கு இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. பெரிய இயக்குனர்கள் அழைத்த போதே அரிதாரம் பூச மாட்டேன் என்று சொல்லி மறுத்தவர் அரசியலை விட்டு விலகிய பின் சினிமாவில் நடிக்க சம்மதித்துள்ளார். #LKG #RJBalaji #NanjilSampath
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X